Tuesday, November 2, 2010
Wednesday, October 20, 2010
Monday, October 18, 2010
திராவிட மணி ஆர்.கே.எஸ்.
தென்னாட்டுத் தாகூர் என்றும், திராவிட மணி என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடஞ் சூட்டப்பட்ட ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1892).
பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு -அதற்குமேல் சட்டப் படிப்பு, மாணவர் பருவத்திலேயே சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல், பேச்சுப் போட்டி களில் முதல் பரிசு இவை எல்லாமே வளரும் பருவத் தில் ஆர்.கே.எஸ். அவர் களிடத்தில் குடி கொண்டு விட்டன.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக் குண்டு. கொச்சியின் திவா னாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர் ஒளி வீசினார்.
இந்தச் சிறப்புகளைவிட தந்தை பெரியார் அவர் களின் தன்மான இயக்கத் தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவர்தம் பெருமை மகுடத்தில் என் றும் ஒளிதரும் அத்தியாயம் ஆகும்.
1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாட்டின் வர வேற்புக் குழுத் தலைவராக இருந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார். வரவேற்புக்குழு தலை வர் என்கிற முறையில் அவர் ஆற்றிய உரையில் மின்னித் தெறித்தவை - அவரின் கொள்கைச் சான்றாண்மைக்கான ஆவணமாகும்.
சுயமரியாதை, ஒவ் வொருவருக்கும் தனிப் பெரும் சொத்து. சுயமரி யாதை இயக்கம்தான் மக் களின் சிந்தனா சக்தியை வளர்த்திருக்கிறது. மந்தி ரங்களையும், பாராயணத் தையும், ஜபமாலையை உருட்டுவதையும் விட்டு விட்டு,
கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் கோ யிலின் மூலையில் அமர்ந்து யாரைத் துதிக்கிறாய்?
கண்களைத் திற! உனது கடவுள் உனக்கு முன்னால் இல்லை என்ப தைப் பார்! என்று கூறிய ரவீந்திர நாத் தாகூர் நாத்திகரா? என்று பேசிய வர் சண்முகனார்.
1931ஆம் ஆண்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுய மரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவரும் சண்முகனாரே ஆவார்.
1.8.1927 குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில், இராம சாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டி யார் ஆகிய நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசியலைப் பொறுத்தவரை தங்களி டையே கருத்து வேறுபாடு இருந்தாலும், சமுதாய சம்பந்தமான எல்லாக் காரியங்களிலும் ஒன்றாக இருந்து வேலை செய்வ தெனத் தீர்மானித்துக் கொண்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அந்த இனவுணர்வு வெல்லட்டும்!
- மயிலாடன்
Saturday, October 16, 2010
டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள் விழா
பொருளாதார மாமேதை,சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர், டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள் விழா 17-10-2010 அன்று காலை 9-30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.வாணிய சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் Prof.Dr.S.V.சிட்டிபாபு MA.,B.T .,D.litt.,திரு. V.தண்டபாணி செட்டியார் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.அனைவரும் வருக என வாணியர் இளைஞர் நலச் சங்கம் (VYWA) அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
Wednesday, October 13, 2010
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா
Wednesday, September 1, 2010
முக்கிய குலத்தொழில்
Monday, August 16, 2010
சுதந்திர தின விழா!
இந்திய ஜனநாயகம் அனைத்து கருத்துக்களுக்கும் எப்போதும் இடமளித்து வந்திருக்கிறது என்று அவர் கூறினார். சாதாரண மக்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் செயல்படும் என்றார் பிரதமர்.
சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் நேற்று காலை சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணி லோகாம்மாள் அறக்கட்டளை மற்றும் VYWA வின் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அண்ணல் காந்தியடிகள் மற்றும் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் உருவபடத்தினை திறந்துவைத்து தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு வைத்து தீப ஆராதனை நடத்தி பெரியோர்களால் தேசியக் கோடி ஏற்றிவைக்கப்பட்டது.அனைவரும் தேசியகீதம் பாடியும்,வந்தேமாதரம் முழக்கமிட்டும் தேச ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர் .அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
லோகாம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள்.
Wednesday, July 21, 2010
கல்வி உதவி
Sunday, July 11, 2010
Wednesday, July 7, 2010
Wednesday, June 23, 2010
திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் !
வாணியர் குலத்தின்விடிவெள்ளி தமிழ்நாடு வாணியர் பேரவை நிறுவனர்- தலைவர் திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இன்று (24-06-2010)பிறந்த நாள்.VYWA நிர்வாகிகள் மற்றும் மாவட்ட,பகுதி, வாணியர் பெருமக்கள் சார்பில்திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்கவளமுடன்!
அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நீளாயுள் நிறை செல்வம் உயர்புகழ் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழ்கின்றோம்.
Monday, May 10, 2010
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் நினைவு நாள்
Saturday, May 8, 2010
ஜாதிவாரி கணக்கெடுப்புvywa ஆதரவு.,
அரசு எடுக்கும் கணக்கெடுப்பே இறுதியானது.அதன்பின்பே நாங்கள் முடிவெடுக்க இயலும்என்கிறார்கள்.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள நீதிபதிகள் என்ன சொல்லு-கிறார்கள்?
1931க்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் நிலையில் எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் அளிக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் வினா தொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கப்போவதில்லை என்பதில் சமூகநீதிக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் இருப்பதாகவே தெரிகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்ற கணக்குத் தெரிந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் மேலும் உயர்ந்துவிடுமே என்ற அச்சம் உயர்ஜாதி வட்டாரத்தை உலுக்குகிறது.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற தீர்ப்பும் அடிபட்டுப் போகக்கூடும் என்பதால் உயர்ஜாதி ஆளும் வட்டாரம்-_ நிருவாக வட்டாரம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாக நினைக்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
இதனை எதிர்த்து சமூகநீதியாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்-புக்குக் கீழும்வரும் என்றும் எச்சரிக்கிறோம்.
ஆகவே பிற்பட்ட வகுப்பினருக்காக குரல் கொடுக்கும் திராவிடர் கழகத்தின் முடிவை நாம் ஆதரிப்போம்.
மஞ்சள் நீராட்டு விழா
Wednesday, May 5, 2010
ஆர் கே எஸ் பற்றி அண்ணா கூறிய ஒரு சம்பவம்
சமுதாய மாற்றம் என்பது எவ்வளவு பெரிய அளவுக்கு இன்றைக்கு எளிதாக வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னாலே எவ்வளவு சங்கடத்தோடு இருந்தது என்பதற்கு அண்ணா அவர்கள் ஒரு சாட்சியத்தை, ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறார்கள், அந்தப் பொதுக்கூட்டத்திலே.
அண்ணா பேசுகிறார் கேட்போம். மதத்துறையிலே மக்கள் மறுமலர்ச்சி பெற உழைக்க வேண்டும். இது சமயம் மத மமதை ஒன்று என் நினைவிற்கு வருகிறது.
கொச்சி திவான் வீட்டில் அண்ணா
1937ஆம் ஆண்டு நமது சர்.சண்முகம் (ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டுவிழா) கொச்சித் திவானாக கொலு வீற்றிருந்தபொழுது நடந்த சம்பவம் அது. நானும் இன்னும் சிலரும் (அண்ணா அவர்களும், மற்ற நண்பர்களும்) கொச்சிக்குப் போய் கோவை கோமான் வீட்டில் தங்கினோம். (திவான் வீட்டிலே தங்கியிருக்கின்றார்கள்).
மாலையில் அவருடைய மோட்டார் காரிலேயே கோயிலுக்குச் சென்றோம். (குருவாயூர் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதில் என்ன சிறப்பு என்பதற்காகப் பார்க்கச் செல்லுகிறார்கள்.) அவர் (திவான்) உடன் வரவில்லை. எங்களை கோவிலுக்குள்ளே விட நம்பூதிரி மறுத்தார். நாங்கள் திவான் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறி, சலுகை பெற முயன்றோம். (திவான் வீட்டு விருந்தினர் என்று சொன்னால் உடனே விடுவார்கள் என்பதற்காக சொன்னோம்)
செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை
அதற்கு நம்பூதிரி திவான் வீட்டிற்கு வந்திருப்பதால்தான் எங்களை கோவிலுக்குள் விட மறுத்ததாகவும் திவான், இந்த வகுப்பாரை செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார்.
ஏனென்றால் அவர் வாணியச் செட்டியார். அவர் சூத்திரர். அவர் திவானாக இருக்கலாம். திவான் என்று சொன்னால் முதலமைச்சர்_பிரதம அமைச்சர் மாதிரி நிருவாகத்தை நடத்தக் கூடியவர். அவர்களுடைய விருந்தினர்கள் இவர்கள். திவான் வீட்டிற்கு வந்ததினாலேதான் விடவில்லை என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றார்.
கோயிலுக்குச் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்
அவர் கீழ் ஜாதிக்காரர். ஆகவே கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார். அண்ணா விடவில்லை. விவாதம் பண்ணுகிறார்கள், நாங்கள் அவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும் எங்கள் ஊரில் கோயிலுக்குள் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் என்று கூறி உள்ளே போக முயன்றோம்.
(அப்படியாவது அனுமதி கிடைக்கும் என்பதற்காக)
அதற்கு நம்பூதிரி, திவான் வீட்டில் விருந்துண்ணும் நீங்கள் அவர் ஜாதி இல்லையானால் அதைவிட மட்டமான ஜாதியாராகத்தான் இருப்பீர்கள்; இருக்க வேண்டும். எனவேதான் அவர் வீட்டில் தங்கினீர்கள் என்று உள்ளே விடவில்லை_ தோழர்களே! ஜாதித் திமிரின் ஜம்பத்தை, மதத்தின் மமதையைப் பாருங்கள்.
அறிஞன் ஆலயம் நுழைய அருகதை....! அரச குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற அறிஞன் ஆலயம் நுழைய அருகதை அற்றவன் என்ன கேவலம்? இத்தகைய இந்து மதம் வேண்டாம் நமக்கு, இவைகளை ஒழிக்க வேண்டாமா? என்று குடந்தையிலே 1945_லே அண்ணா அவர்கள் சொன்னார்.சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) நினைவு நாள் இந்நாள் (1953)
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமை பெற்ற சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1953)
படிக்கும் காலத்திலேயே துடிப்புமிக்க இளைஞர் இவர். 1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் ஓர் அமைப்பினை பார்ப்பனர் அல்லாத அரசு ஊழியர்கள் உருவாக்கினர். இதற்கு முதுகெலும்பாக இருந்து ஊக்குவித்தவர் டாக்டர் சி. நடேசனார். இந்த அமைப்பின் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டாக்டர் நடேசனார் வீட்டில்தான் நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் பட்டதாரியாவது என்பது அரிதினும் அரிது. அந்த நிலையில், ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களை வரவேற்றுப் பாராட்டி, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை இந்த அமைப்பு நடத்தி வந்தது. திவான்பகதூர் பி. கேசவப்பிள்ளை தலைமையில் அத்தகு வரவேற்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் அப்பொழுது வருகை தந்தனர். பட்டதாரிகள் சார்பாக வரவேற்புக்கு நன்றி கூறி, ஓர் இளைஞர் பேசினார். அவரின் ஆங்கில உரை அனைவரையும் வெகுவாக ஈர்த்துக் கட்டிப் போட்டது. அந்த இளைஞர் வேறு யாருமல்லர் அவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம். சுயரியாதை இயக்கத்தின் நீதிக்கட்சியின் முக்கிய தலைவராகவும் பிற்காலத்தில் ஒளி வீசினார். 1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு இவர் தலைமையில்தான் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்பரான இவர் விடுதலை ஏட்டின் வளர்ச்சிக்குக் கடைசிவரை பொருள் உதவி புரிந்து வந்தார் என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும். அவர் எத்தகைய சுயமரியாதை வீரர் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதும்.
1930 ஆம் ஆண்டு கோவையையடுத்த இருகூரில் உள்ள பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்ப்பதில்லை. கோவை சமூகத் தொண்டு சங்கத்தார் தலையிட்டு சில தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தனர். பார்ப்பனத் தெரு வழியாக அந்தப் பிள்ளைகள் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். உள்ளூர் காவல் துறையும் அவர்களுக்கு உடந்தை! பார்ப்பனர்களின் தூண்டுதலால், ஆர்.கே.எஸ். கட்டி வந்த நூற்பாலைக் கட்டுமானப் பணிக்குப் போகாதபடி ஆள்கள் தடுக்கப்பட்டனர். பார்ப்பனர்களின் சொல்லைக் கேட்டு வேலைக்குப் போகாமல் பட்டினியாகக் கிடக்கப் போகிறீர்களா? இதனால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்று எடுத்துச் சொல்லித் தெளிவடைய செய்தார் ஆர்.கே.எஸ். 80 ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டு சமூக நிலை எப்படி இருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பெருந் தனவந்தர்தான் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கையில் திளைத்த பெருமகன் ஆர்.கே.எஸ். ஆவார்.
கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. ஆர்.கே.எஸ். உருவச் சிலையை கோவையில் இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு நிறுவுவது பொருத்தமாக இருக்குமே!
ஆர்.கே. சண்முகம் நிதி அமைச்சரான நிலையில், அவர் ஜாதியைக் குறிக்கும் வகையில் (வாணியச் செட்டியார்) செக்குப்படம் போட்டுக் கேலி செய்தது ஆனந்தவிகடன் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.
----------------- மயிலாடன் அவர்கள் 5-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Tuesday, May 4, 2010
சண்முகம் செட்டியார் நினைவு நாள்
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள் 5/05/2010 அன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு
Monday, April 26, 2010
இரங்கல் செய்தி
ஏனெனில் அவர்கள் குடும்பம் நம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்காதது.நம்முடைய சங்கத்தின்பால் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய இழப்பு நம்முடைய சமூகத்துக்கும்,அவருடைய குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
Tuesday, April 6, 2010
"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை
நம் வாணியர் குல திலகம் ,இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -இராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
6000 வது இன்னிசை நிகழ்ச்சி வரும் 8-04-2010வியாழனன்று மாலை 6-30 மணிக்கு ராணி சீதை ஹாலில் நடைபெறும் .வாணியர் பெருமக்கள் அனைவரும் .விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, March 27, 2010
Sunday, March 7, 2010
மூத்தோரைப் போற்றும் முத்து விழா
பட்டம் பெற்றவர்கள் விவரம்
திரு.A.E. கோபால் செட்டியார்
திரு.M.K.கணபதி செட்டியார்
திரு .D.சம்பந்தம் செட்டியார்
திரு.B.திருநாவுக்கரசு செட்டியார்
திரு.S.N. திருநாவுக்கரசு செட்டியார்
திரு. K.சுந்தரமூர்த்தி செட்டியார்.
திரு. J.S. சாமிநாதன் செட்டியார் ஆகியோர்.
உடனிருந்து(பம்மல் கே.பழனிச்சாமி செட்டியார்) பணியாற்றியவர்களுக்கு சங்கத்தின் சார்பில் கௌரவித்தல்
ஜாம்பஜார் வாணியர் சங்க செயலாளர் திரு T.S.தாமோதரன் செட்டியார் அவர்கள் வாழ்த்துரை.
தினமலர் திரு நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு சென்னை வானொலி முன்னாள் இயக்குநர் கோ.செல்வம் அவர்கள் சால்வை அனிவிக்கிறார்
VYWA கௌரவத்தலைவர் திரு.R. கோட்டீஸ்வரன் வாழ்த்துரை.
முன்னாள் வானொலி நிலைய இயக்குனர் திரு கோ.செல்வம் அவர்கள் வாழ்த்துரை
திரு.K.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு (வலது) திரு.R.சண்முகம் செட்டியார்,(இடது)
திரு.கோபிநாத் அவர்கள் கேடயம் வழங்குதல்.
கொண்டித்தோப்பு J.S.சாமிநாதன் அவர்களுக்கு
மீர்சாகிப்பேட்டை.திரு.S.N.திருநாவுக்கரசு அவர்களுக்கு
பூந்தமல்லி.திரு. D.சம்பந்தம் செட்டியார் அவர்களுக்கு
மயிலாப்பூர்.திரு.B.திருநாவுக்கரசு செட்டியார் அவர்களுக்கு
திருப்போரூர்.M.K.கணபதி செட்டியார் அவர்களுக்கு
சமூகத்தின் மூத்த தலைவர்.திரு.M. சிவகுருநாதன் செட்டியார் அவர்கள் வாழ்த்துரை
மயிலை.M.சம்பந்தம் அவர்கள் வாழ்த்துரை.
தலைவர் திரு.V.தண்டபாணிசெட்டியார் அவர்கள் தலைமையுரை
இறைவணக்கம்.