Monday, August 16, 2010

சுதந்திர தின விழா!

நாட்டின் 64ஆவது சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது.புதுதில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார்.
இந்திய ஜனநாயகம் அனைத்து கருத்துக்களுக்கும் எப்போதும் இடமளித்து வந்திருக்கிறது என்று அவர் கூறினார். சாதாரண மக்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் செயல்படும் என்றார் பிரதமர்.

சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் நேற்று காலை சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்தார்.

சென்னை திருவல்லிக்கேணி லோகாம்மாள் அறக்கட்டளை மற்றும் VYWA வின் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அண்ணல் காந்தியடிகள் மற்றும் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் உருவபடத்தினை திறந்துவைத்து தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு வைத்து தீப ஆராதனை நடத்தி பெரியோர்களால் தேசியக் கோடி ஏற்றிவைக்கப்பட்டது.அனைவரும் தேசியகீதம் பாடியும்,வந்தேமாதரம் முழக்கமிட்டும் தேச ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர் .அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.



லோகாம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள்.




No comments: