Saturday, May 8, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்புvywa ஆதரவு.,

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவளிக்க வாணியர் சங்கங்கள் முன்வரவேண்டும்.நாம் MBC கோரிக்கை விடுத்தபோது அரசு கேட்ட கேள்வி உங்கள் ஜனத்தொகையை நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது.
அரசு எடுக்கும் கணக்கெடுப்பே இறுதியானது.அதன்பின்பே நாங்கள் முடிவெடுக்க இயலும்என்கிறார்கள்.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள நீதிபதிகள் என்ன சொல்லு-கிறார்கள்?

1931க்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் நிலையில் எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் அளிக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் வினா தொடுக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கப்போவதில்லை என்பதில் சமூகநீதிக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் இருப்பதாகவே தெரிகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்ற கணக்குத் தெரிந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் மேலும் உயர்ந்துவிடுமே என்ற அச்சம் உயர்ஜாதி வட்டாரத்தை உலுக்குகிறது.

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற தீர்ப்பும் அடிபட்டுப் போகக்கூடும் என்பதால் உயர்ஜாதி ஆளும் வட்டாரம்-_ நிருவாக வட்டாரம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாக நினைக்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

இதனை எதிர்த்து சமூகநீதியாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்-புக்குக் கீழும்வரும் என்றும் எச்சரிக்கிறோம்.
ஆகவே பிற்பட்ட வகுப்பினருக்காக குரல் கொடுக்கும் திராவிடர் கழகத்தின் முடிவை நாம் ஆதரிப்போம்.

No comments: