skip to main | skip to sidebar
Vaniyar Youth Welfare Association

Monday, July 19, 2010

நன்றி! -தினமலர்
Posted by வாணியர் இளைஞர் நலச் சங்கம் at 4:04 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: chennai kumarakottam, dinamalar

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Wikipedia

Search results

We are at Facebook

https://www.facebook.com/dharmalingam.pazhanichamy

இன்றைய சிந்தனை

01
எண்ணம் சொல் செயலால்

எவருக்கும்,எப்போதும்,
நன்மையே விளைவிக்க,
நாட்டமாய் இரு

02
தூய்மையாம் விளைவுதரும்
சொற்கள் அனைத்துமே
வாய்மையாம் அவைவாழ்வின்
வளம் காத்துச் சிறப்பளிக்கும்.

03
எண்ணு,சொல், செய்
எல்லோர்க்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு.

---யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

04

மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.
--- சுவாமி விவேகானந்தர்.


05
அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும்
--- சுவாமி விவேகானந்தர்.

06

சோதிக்க நினைப்பவன் கடவுள்
சாதிக்க நினைப்பவன் மனிதன்.

07

அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் ஆற்றும் கடமையெல்லாம் அன்பின் செயலாகும்.
---யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

08
கட்சிகளால் அரசாட்சி
கையாளப்படும் போக்கு
பட்சிகளை வேடுவர்கள்
பரமரிக்கும் முறை போன்றே
---
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


09

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி
ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.இவை அனைத்திற்கும் மேலாக,அன்பு வேண்டும்
.
--- சுவாமி விவேகானந்தர்.

10

ஒருவனுக்கு செல்வத்தையும் நல்வாழ்வையும் அளிப்பது முயற்சிதான்.முயற்சி இல்லாதவர்கள் எப்பொழுதும் வறுமையில் வாடும் வாழ்வில்தான் காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பார்கள்.
-----திருவள்ளுவர்.

11

எந்தச்செயலில் ஈடுபட்டாலும் உயர்வான செயலிலே ஈடுபட வேண்டும்.ஒருவேளை அந்தச்செயல் தோல்வி அடைந்தாலும்,அந்தத்தோல்வியை யாரும் இழிவாக நினைக்கமாட்டர்கள்.
-----திருவள்ளுவர்.

12

ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில்
> தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது.
> ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை
> மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில்
> அடைவதற்கு முடியாததாகத் தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும்
> அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற
> ஒரு நிலைமை ஆகின்றது.
-----Dr.M.S.உதயமூர்த்தி.

13

கீழ்கண்ட மூன்றில் எந்த வகையான வேலை முறை அதிகமாகக் கையாளப்பட்டு வருகிறதோ, அதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்வின் வெற்றி இருக்கும்.
1.கடமைக்காகச் செய்துமுடிக்கும் வேலை கடனுக்காகச் செய்த வேலையாகவே இருக்கும்.
2.கட்டாயத்துக்காகச் செய்கிற வேலை சிறப்படையாது.
3மனம் படிந்து, முழு ஈடுபாட்டோடு செய்கிற வேலை பரிபூரணமாய் இருப்பதோடு, கலைப்பண்பின் மெருகும் பெற்றுப் பொலிவுறும்.

ஆகவே வெற்றி வாழ்வை விரும்புகிற ஒருவன், அவன் செய்யும் காரியம் அனைத்திலும் கலைப்பண்பின் மெருகை ஏற்றி, அது பூரணமாகப் பொலிவுறும்படிச் செய்யவே எண்ணுவான். அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு, எந்தக் காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய அவன் பழகிக்கொள்ள வேண்டும்.
---------ஜேம்ஸ் ஆலன்.

14

இரவோடிரவாக ஒரு விதை,மரமான கதையை நாம் கேட்பதில்லை.அதுபோலத்தான் ஆசைப்படும் ஒரு மனிதன் இரவோடிரவாக,ஒரு விஞ்ஞானியாகவோ,ஒரு கலைஞனாகவோ,ஒரு தலைவனாகவோ மாறுவதில்லை.
ஒருவன் ஒரு பாறையைப் பிளக்க அதன் மீது சம்மட்டி கொண்டு அடி மீது அடியாக அடித்துக்கொண்டிருந்தான்.நூறாவது அடியில் பாறை பிளந்தது.பாறை உடைப்பவன் சொன்னான்,"நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது"என்று.ஆனால் நமக்குத் தெரியும் அதற்குமுன் அடித்த 99 அடிகளும் அந்தப் பாறை பிளப்பதற்குக் காரணமாக இருந்தன என்பது.
உழப்பின் பலன் பல சமயம் உடனடியாகத் தெரியாது.அதற்காக நாம் உழைக்க தயக்கம் காட்டக்கூடாது.
-----Dr.M.S.உதயமூர்த்தி.

15

இதுவரை எங்கிருந்தோம், எப்படி இருந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல லட்சியம்.நாளை எதிர்காலத்தில் எங்கே போக விரும்புகிறோம் என்பதைப் பொறுத்ததே,லட்சியம்
-----Dr.M.S.உதயமூர்த்தி.

16

ஒருவருக்குச் சாதனை செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தால்,அதற்கான ஒரு காலம் வந்தே தீரும்.அந்தக்காலத்தில் அதனை பயன்படுத்தி செய்யவேண்டிய சாதனைகளைச் செய்தால் வெற்றி உறுதியாகும்.
-----திருவள்ளுவர்.

17

பலரும் கூடி இருக்கும்போது,யாருக்கும் பயன் இல்லாத பேச்சுகளைப் பேசுவது தீமையைத் தருமே தவிர நன்மையைத் தராது.
-----திருவள்ளுவர்.

18

நமது கடிகாரத்து மணியை , ரேடியோவில் மணி கேட்டுச் சரி செய்து கொள்வது போல்,
நல்லவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும், சிந்தனைகளிலிருந்தும் நம் வாழ்வை
நாம் சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்
----- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.


19

நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே,
அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும்
திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே
இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்?

இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.

இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

----யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

20

ஒரு செயலைச் செய்யும் முன் அதனைச் செய்யமுடியாது என்று நினைத்துச் சோர்வடையக்கூடாது.அதனை முடிக்க மேற்கொள்ளும் முயற்ச்சியே பெருமை தரும். -----திருவள்ளுவர்.

21

பிறருக்கு உதவ வேன்டும் என்னும் உயர்ந்த எண்ணம்,விடா முயற்சியுடன் உழைப்பவரிடமே இருக்கும்.
-----திருவள்ளுவர்.

22

தன்னால் செய்ய முடிந்ததையும்,செய்யத்தக்க வழிகளையும் அறிந்து,அதில் உறுதியாக இருந்து,ஒருசெயலைச் செய்பவருக்குச் செய்யமுடியாதது என்று ஒன்றும் இல்லை.
-----திருவள்ளுவர்.


23

மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.

எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்.

எல்லோரும் அதன் கீழ் இன்பமாக வாழலாம்.

----யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


24

உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.
-----ஸ்ரீ அரவிந்தர்

25

அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே. உண்மையான அன்புக்கு நம்முள் ஒரு சிறிதாவது இடமிருந்தால் வெகு அழகான பேச்சைவிட அது எவ்வளவோ நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.
-----அன்னை


26

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை

வடிவமைக்கின்றது!”

-------Vethathri Maharishi



27

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்.

உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.
------------Vethathri Maharishi


28

“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்,ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்க செய்யும்.இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்.எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-

----------
பகத்சிங்



29

எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.
----யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

30

தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடுதான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்.
----யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


31

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
--- சுவாமி விவேகானந்தர்.





TIME

நமது சங்கத்தில் இதுவரை நடைபெற்ற பணிகளில் சில‌

1.எல்.ஐ.சி பாலிசி பத்திரத்தை தொலைத்துவிட்ட நிராதரவான குடும்பத்திற்கு
நமது சங்கத்தின் உத்தரவாதத்தின் மூலம் ரூபாய் ஒன்பது லட்சம் பெற்று தந்துள்ளோம்.

2.பக்கத்து வீட்டின் உரிமையாளரால் பாதிக்கப்பட்டவருக்காக அவரது வழக்கில்
பாதிக்கப்பட்டவரின் நியாயமான அரசு ஆவணங்களை விரைவாக பெற்றுத்தந்து
மூன்றே மாதத்தில் வழக்கை வெற்றிகரமாக முடித்துத்தர உதவியது.

3.சரியான தொழில் தெரியாத ஊனமுற்ற இளைஞரின் மறுவாழ்விற்காக அவருக்கு உதவக்கூடிய விதத்தில் கணிணி பயிற்சி அளிக்க ரூபாய் பத்தாயிரம் உதவிசெய்து தற்போது வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளார்.

நம் நாட்டின் (1947) முதல் நிதியமைச்சராக இருந்தவரும் உலகப் பொருளாதார மாமேதையுமான டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் சிறப்பை நாட்டுக்கு எடுத்துரைப்பதில் VYWA பெரும் பங்கு வகிக்கிறது.

மேலே குறிப்பிட்டவை ஒருசில துளிகள் மட்டுமே.....

Blog Archive

  • ►  2018 (3)
    • ►  October (2)
    • ►  August (1)
  • ►  2016 (6)
    • ►  July (4)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2015 (6)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2014 (9)
    • ►  December (3)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (2)
  • ►  2013 (4)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  January (1)
  • ►  2012 (14)
    • ►  December (2)
    • ►  September (3)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (4)
    • ►  April (1)
    • ►  January (1)
  • ►  2011 (7)
    • ►  October (5)
    • ►  April (1)
    • ►  January (1)
  • ▼  2010 (31)
    • ►  November (1)
    • ►  October (6)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ▼  July (4)
      • கல்வி உதவி
      • நன்றி! -தினமலர்
      • திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி சுந்தர வி...
      • ஸ்ரீ சரபேஸ்வரர் இலட்சார்ச்சனை 18-07-2010
    • ►  June (1)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2009 (19)
    • ►  October (8)
    • ►  September (4)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2008 (15)
    • ►  November (1)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  January (1)
  • ►  2007 (5)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  July (1)

Followers

திருக்குறள்

About Me

My photo
வாணியர் இளைஞர் நலச் சங்கம்
View my complete profile

world map hits counter
map counter