Friday, October 30, 2009
Wednesday, October 28, 2009
தினமணியில் ஆர் கே சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டுச் செய்தி
நன்றி-
Tuesday, October 27, 2009
ஆர்.கே.எஸ் புத்தக வெளியீட்டு விழா
‘Creator of Prosperity’ Dr. N. Mahalingam releases the book
on Sir R K Shanmugam Chetty. Our President Mr. Mahendra Ramdas receives the copy.
Author of the book Mr. R. Sundarraj (L) and our Hon. Secretary Mr. D. Nandakumar (R) is also seen.
டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை திரு.ஆர் சுந்தரராஜன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.அதன் முதல் பிரதி கோவை வர்த்தக மையத்தில் 26-10-2009 அன்று அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை குறுகிய காலத்தில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கு VYWA வின் வாழ்த்துக்கள்.
Saturday, October 17, 2009
விடுதலை நாளேட்டில் ஆர்.கே.எஸ்.
ஆர்.கே.எஸ்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இன்று (1892). சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1931 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநில சுயமரி-யாதை மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர். இவர் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர். அம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்-கப்பட்டார்.
காந்தியாரோடு ஒருமுறை இவர் உரையாடிக் கொண்டி-ருந்தபோது, ஆர்.கே.எஸ். அவர்களிடம் தெறித்த தனித்தன்மையான சீர்திருத்த கருத்துகளைச் செவியுற்ற காந்தியார் இந்த விஷயத்தில் தங்களுக்குக் குருநாதர் யாராவது உண்டா? என்ற கேள்-வியைக் கேட்டபோது, ஆம், எனது குருநாதர் ஈரோடு ஈ.வெ. ராமசாமியார்தான் என்று கூறியுள்ளார். அவரைச் சந்திக்கவேண்டும் என்று காந்தியார் விரும்பினார் 1927 இல் பெரியார் காந்தியார் சந்திப்பு பெங்களூரில் நடந்தது_ அதன் தொடர்ச்சிதான்.
விடுதலை ஏடு பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போதெல்லாம் தொடர்ந்து அதன் வாழ்வுக்கு நிதி உதவி செய்து வந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார்கள். (தமிழர்கள் நன்றி உணர்வோடு நினைவு கூர்வார்களாக!)
அந்த விளையும் பயிர் முளையில் தெரிந்தது. சென்னையில் கல்லூரிகளில் படித்தபோது அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசைத் தட்டி செல்பவராக ஆர்.கே.எஸ். இருந்தார்.
1913 இல் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திராவிடர் சங்கம் நடத்தி வந்தார். வருடந்தோறும் பட்டதாரிகளாக வெளிவரும் பார்ப்பனர் அல்லாதாரை அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அப்படி ஒருமுறை அங்கே வந்து, பட்டதாரிகள் சார்பில் நன்றி தெரிவித்து, ஆங்கிலத்தில் ஆற்றிய உரையால் அனைவரையும் ஒரே மூச்சில் கவர்ந்து ஈர்த்தவர் ஆர்.கே. சண்முகம். அந்தக் கூட்டத்தில் வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயர், பனகல் அரசர் போன்றவர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி-யிட்டு வெற்றியையும் ஈட்டினார். சட்டமன்றத்தின் 127 உறுப்பினர்களுள் மிகவும் இளையோராக இருந்தவர் சண்முகம்தான். அப்போது நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அதன்பின் மத்திய (டெல்லி) சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் (1923). மத்திய சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், தந்த புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவில் அகல விரிந்து அவரைப் பார்க்கும்படிச் செய்தன.
இந்திய அளவிலும், உலக அளவிலும் அவர் பெயர் பரவியிருந்தது என்பது உண்மைதான் என்றாலும், அடிப்படையில் ஆர்.கே. சண்முகனார் அழுத்தமான சுயமரியாதைக்காரர் ஆவார்.
பிராமணியச் சடங்கை விலக்கியவர்கள் என்ற ஒரு பட்டியல் குடிஅரசில் வெளி-வந்தது. (1) ஈ.வெ. ராமசாமி (2) திரு.வி.கலியாணசுந்தரம் (3) டாக்டர் பி. வரதராசுலு (4) ஆர்.கே. சண்முகம்.
இந்த அடையாளம் போதுமே!
நன்றி!-விடுதலை. - மயிலாடன்
Wednesday, October 14, 2009
டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 118 வது பிறந்தநாள் விழா 17-10-09அன்று காலை 9-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு அண்ணாமலைபல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் .S.V.சிட்டிபாபு மற்றும்,தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம், வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்VYWA தலைவர்.K.மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.வாணியர் குலமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Wednesday, October 7, 2009
கீழப்பாவூர்-காந்தி ஜெயந்தி விழா
Tuesday, October 6, 2009
தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்திஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.நம் சமூகப் பெருந்தலைவர் வி.தண்டபாணி செட்டியார்,கௌரவத்தலைவர் ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,சங்கத்தலைவர் கே.மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் ,சமூக மக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.
Saturday, September 26, 2009
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ம் தேதியன்று சரியாக காலை 10-00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்திஜி அவர்களின் சிலையின் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். நம்சமூகத்தின் முன்னணித் தலைவர்கள்,மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொள்வார்கள்.தாங்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு நம் வாணியர் குல முன்னோடியான மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வருக என வரவேற்கிறோம்.
Thursday, September 24, 2009
Monday, September 21, 2009
பிரணாப் முகர்ஜியின் தேசப்பற்று.
Friday, August 14, 2009
Friday, July 17, 2009
இசையமைப்பாளர் ஹரன்
இசை வெளியீட்டு விழாவில் A R ரஹ்மான் உட்பட திரையுலக பிரமுகர்கள். வலதுபக்கம் முதலாவதாக ஹரன்.
Thursday, July 16, 2009
விஜய் டிவி யின் நீயா நானா?
செல்வேந்திரன்!
இவரைபற்றி நம்மைவிட அவருடன் பழகிய திரு.K.B.கிருஷ்ணகுமார் கூறுவதை படித்து பாருங்கள்.
Tuesday, January 27, 2009
அந்த உல்லாசப் பயண வாகனம் ஊட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு கொண்டை ஊசி வளைவில் நிறுத்தப் படுகிறது. கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டே, வண்டியில் வந்த ஏழெட்டுப் பேரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிருவர் சிகரெட்டைப் புகைத்தபடி பேசிக் கொண்டே இருக்கும்போது, ஒரு வனக் காவலர் வருகிறார்.
“சார்.. இங்க வண்டியை நிறுத்தி, சிகரெட், வாட்டர் பாட்டில்ன்னு குப்பை போடாதீங்க சார். ஊட்டியே காணாமப் போயிடும் இப்படி எல்லாரும் பண்ணினீங்கன்னா. நீங்க போடற குப்பையை நாலாங்க்ளாஸ், அஞ்சாங்களாஸ் பசங்க பொறுக்கறாங்க சார்... இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா... அவன் சுத்தமா வெச்சுக்கடான்னு காசு தர்றப்ப நாம இப்படி குப்பை போடறது” என்றபடி பேசவே முடியாதபடி சில வாதங்களை எடுத்துவைக்கிறார். எல்லாரும் ‘சாரி’ கேட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாலும், “நம்மளைக் கேள்வி கேட்கத்தான் அவனால் முடியும். இதவிட பெரிய தப்பு பண்றவனையெல்லாம் விட்டுடுவாங்க” என்ற பேச்சு எழும்பியபோது பயணத்தில் வந்த ஒருவர் சொல்கிறார்:
“அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”
அவர்தான் செல்வேந்திரன்.
இந்தப் பதிவுக்கு ‘செல்வேந்திரன்’ என்றுதான் முதலில் தலைப்பிட்டேன். பிறகுதான் ‘செல்வேந்திரன்!’ என்று மாற்றினேன். பெயருக்குப் பின்னால் ஆச்சர்யக்குறி போடும் அளவுக்கு எல்லாரிடமிருந்து வித்தியாசப்பட்டு, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர் என்பதால். செல்வேந்திரர் என்று ‘ர்’ விகுதியில் எழுதவேண்டிய அளவுக்கு உயர் பண்புடையவர் இவர்.
முட்டை சைவமானது போல, கெட்ட பழக்கங்கள் என்று வரையறைப் படுத்தும் பல பழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் நல்ல பழக்கங்கள்தான் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்ட போதிலும், எந்தத் தீய பழக்கத்தையும் பழகாமல், ஒரு தபஸ்வியின் வாழ்வுக்குச் சமமான ஒழுக்கத்துடன் இருக்கிறார் இவர்.
எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன் நான். இவரோ, அதைத் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் செய்வதால் என்னை பிரமிக்க வைக்கிறார்.
பயணம் முழுவதும் எல்லாருமே ‘ஹ்யூமர்’ சென்ஸோடு பலவிஷயங்களைப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தோம். ‘ஹ்யூமன்’ சென்ஸோடு சிந்தித்துக் கொண்டும் வந்தவர் இவர் மட்டும்தான்.
பணியின் நிமித்தம் தவறுகள் நடக்கும் துறைகளுக்கெல்லாம் செல்ல வேண்டியிருப்பினும், பொது இடத்தில் குப்பை போடும் சாமான்யன் முதல், நாட்டையே நாசமாக்கும் பலதரப் பட்ட மக்களைச் சந்தித்தாலும் எதிலும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் தன்னிலையில் வாழும் ஒருவராய் இவர் இருப்பதில் இவர் எங்கோ உயர்ந்து நிற்கிறார்.
இவரது பதிவுகள் இவரது திறமையைத்தான் வெளிக்காட்டும். பழகிப் பாருங்கள்.. இவரது மனிதத்தை நீங்கள் உணரமுடியும்.
இவரை இவ்வளவு நான் சிலாகிக்கக் காரணம், பல இடங்களில் பல பொழுதுகளில் நம்மை ரௌத்ரப் படுத்தும் நிகழ்வுகள் நடக்கையில் மனதிற்குள் வெம்பி, விம்மி அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் என் எண்ணமொத்த நண்பர்களோடு பகிர்ந்து கொள்பவன். இவரோ, அதை அங்கேயே தட்டிக் கேட்டு செயலில் இறங்க முயற்சிப்பவர்.
எல்லாருக்கும் பல விஷயங்களுக்காக ‘நாம் நல்லவன்தான்’ என்ற எண்ணமேற்படும். அப்படி என்னை நானே நல்லவன் என்று சொல்லிக் கொண்டால், நான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை இவரோடு இருந்த இரு நாட்களில் உணரமுடிந்தது.
தனிமனித ஒழுக்கத்தால் தேசத்தில் மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கையில் எப்போதும் மாற்றமில்லை. ஆனாலும் அவ்வப்போது, அங்கங்கே நடக்கும் சில ஒழுக்க மீறல்களும், அந்த ஒழுக்க மீறல்களில் சேராமல் ஒதுங்கி நாம் நிற்கையில் வேற்றுகிரக வாசியைப் போல நம்மீது வீசப்படும் பார்வைகளும் என் நம்பிக்கையின் ஆணிவேரை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முற்பட்டிருக்கிறது. ஆனால் செல்வேந்திரனைப் போல ஒருவரைப் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை பலப்பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார் தேசத்தை மாற்ற. அந்த நூறு இளைஞர்களிடம் இருக்க வேண்டிய கனல், இவர் ஒருவரிடமே உண்டு. ஆனால் காலம் மாறிவிட்டதல்லவா... இப்போது இவரைப் போல நூறு இளைஞர்கள் தேவையாயிருக்கிறது இந்த தேசத்தை மாற்ற.
இவற்றைத் தவிர இவரொரு சிறந்த படிப்பாளி, படைப்பாளி. விகடனில் இவரது படைப்பான ‘முடியலத்துவம்’ பல வாரங்கள் வந்துகொண்டிருந்தபோது, வாங்கியவுடன் படிக்கும் பக்கமாக அது இருந்தது. இவரெழுதிய ‘செல்லெனப்படுவது’ எனும் கதையா... கட்டுரையா என்ற கட்டுக்குள் அடங்காத படைப்பொன்று சுஜாதாவால் கவரப்பட்டு ‘யார்யா அவன்? இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் பண்ணுங்கப்பா’ என்று அவர் அழைத்துச் சொல்லும் வண்ணம் அமைந்தது.
நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிப் படிக்கிறார். பாராட்டுகிறார். ‘நிறைய கவிதைத் தொகுப்புகள் வெளிவருவதை நான் தடுத்திருக்கிறேன்’ என்று இவர் சொல்வதன் மூலம், பிடிக்காத படைப்புகளை காலில் போட்டு நசுக்கத் தயங்காத ஆண்மை இவருக்குண்டு என்பதையும் அறிந்தேன்.
நானெல்லாம் ஏதாவது எழுதவேண்டியிருந்தால் மனதிற்குள் எழுதிப்பார்த்து, கணினியில் ட்ராஃப்ட் எழுதி, படித்துத் திருத்தி வெளியிடுவேன். இவர் பேசுவதெல்லாமே ஒரு படைப்புக்குரிய தகுதியோடுதான் இருக்கின்றன.
ஒருமுறை ‘இப்படிப்பட்ட அறிவியல் சாதனம் வராதா’ என்று ஓரிரு சாதனங்கள் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா... ‘ஹியரிங் ரைட்டர்’ மாதிரி நாம் பேசினாலே கிரகித்துக் கொண்டு எழுத்துக்களாய் எழுதிவிடும் ஏதேனும் கண்டுபிடிப்பு வந்தால் (வந்துடுச்சா?) இவருக்குப் பரிசளிக்கலாம். எக்கச்சக்க படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
யாரோடாவது ஏதாவது கூட்டுவிவாதம் நிகழ்த்தும்போது ‘இல்லல்ல.. அது அப்படியில்ல’ என்று எதிர்வாதம் வருவது வழக்கம். இவர் பேசும்போது மட்டும், நாங்கள் கேட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது.
என் நண்பன் செந்தில் ஒருமுறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதாவது ‘திடீரென்று நீங்கள் பெண்ணாக மாறிவிடுகிறீர்கள் என்றால் உங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களில் யாரைக் காதலிப்பீர்கள்?’ என்று. அப்போதைக்கு அப்படி யாருமே இல்லை என்றேன். இப்போது என்னால் சொல்லமுடியும்!
‘இரண்டுநாள் எங்கே போனீர்கள்’ என்று கேட்பவர்களிடமெல்லாம், டூருக்கு, ஊட்டிக்கு என்பதையெல்லாம் விடுத்து, இவரைச் சந்தித்ததைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் எந்தச் சூழலிலும், எந்த நிலையிலும் இப்போது இருக்கும் வீரியம் குறையாதிருந்து தன்னாலான மாற்றத்தை இந்த இளைஞர் ஏற்படுத்துவார் என்பதை நினைக்கையில் மிகப் பெருமிதமாய் இருக்கிறது.
பயணத்தில் பல முறை நாங்களெல்லாம் பயன்படுத்திய வார்த்தை ‘ச்சான்ஸே இல்ல!’ ஆனால் இவரைப் பார்த்தபின் தோன்றுகிறது.. சான்ஸ் இருக்கு!
இந்தப் பதிவைப் பார்த்தும் அவர் கோபப்படுவார். ‘எதுக்கு இவ்ளோ பாராட்டணும்’ என்பதான கோபமாக அது இருக்காது. ‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சே’ என்பதான கோபமாகத்தான் அது இருக்கும்.
அதுதான் செல்வேந்திரன்!
விஜய் டிவி யின் நீயா நானா? வில் நம் சமூகத்தை சேர்ந்த திரு.செல்வேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் நீங்களும் கண்டு கேட்டு வாழ்த்துங்கள்!
Friday, April 10, 2009
சமுதாய விழிப்புணர்வுக் கூட்டம்
வாணியர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் 5-04-2009 அன்று நம் சமுதாய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.நம் சமூகப்பெரியோர்கள் மற்றும் இளையதலைமுறைசார்ந்த சாதித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டம் நம் சமுதாயத்தின் ,நம்முடைய முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை பலரும் எடுத்துக்கூறினர்.
கூட்டத்தின் சிறப்பு அம்சமாக ,திரு.S.முருகேச செட்டியார்,
திரு வி.தண்டபானிசெட்டியார்,திரு.ஆர.பன்னீர்செல்வம்,மற்றும்
திரு.சி.எல்.செல்வம் (வணிகர் சங்கத் தலைவர்) அவர்கள்
திரு .த.வெள்ளையன் (தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர்)
அவர்களை சிறப்பு அழைப்பாளராக விழாவுக்கு அழைத்துவந்தார்.திரு.வெள்ளையன் அவர்களின் பேச்சு வாணியர் சமுதாயம் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? என்ற அளவுக்கு நமது பெருமைகளை விளக்கிக் கூறினார்.