Thursday, July 16, 2009

விஜய் டிவி யின் நீயா நானா?

செல்வேந்திரன்!



இவரைபற்றி நம்மைவிட அவருடன் பழகிய திரு.K.B.கிருஷ்ணகுமார் கூறுவதை படித்து பாருங்கள்.

அந்த உல்லாசப் பயண வாகனம் ஊட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு கொண்டை ஊசி வளைவில் நிறுத்தப் படுகிறது. கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டே, வண்டியில் வந்த ஏழெட்டுப் பேரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிருவர் சிகரெட்டைப் புகைத்தபடி பேசிக் கொண்டே இருக்கும்போது, ஒரு வனக் காவலர் வருகிறார்.

சார்.. இங்க வண்டியை நிறுத்தி, சிகரெட், வாட்டர் பாட்டில்ன்னு குப்பை போடாதீங்க சார். ஊட்டியே காணாமப் போயிடும் இப்படி எல்லாரும் பண்ணினீங்கன்னா. நீங்க போடற குப்பையை நாலாங்க்ளாஸ், அஞ்சாங்களாஸ் பசங்க பொறுக்கறாங்க சார்... இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா... அவன் சுத்தமா வெச்சுக்கடான்னு காசு தர்றப்ப நாம இப்படி குப்பை போடறதுஎன்றபடி பேசவே முடியாதபடி சில வாதங்களை எடுத்துவைக்கிறார். எல்லாரும்சாரிகேட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாலும், “நம்மளைக் கேள்வி கேட்கத்தான் அவனால் முடியும். இதவிட பெரிய தப்பு பண்றவனையெல்லாம் விட்டுடுவாங்கஎன்ற பேச்சு எழும்பியபோது பயணத்தில் வந்த ஒருவர் சொல்கிறார்:

அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”
அவர்தான் செல்வேந்திரன்.

இந்தப் பதிவுக்குசெல்வேந்திரன்என்றுதான் முதலில் தலைப்பிட்டேன். பிறகுதான்செல்வேந்திரன்!’ என்று மாற்றினேன். பெயருக்குப் பின்னால் ஆச்சர்யக்குறி போடும் அளவுக்கு எல்லாரிடமிருந்து வித்தியாசப்பட்டு, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர் என்பதால். செல்வேந்திரர் என்றுர்விகுதியில் எழுதவேண்டிய அளவுக்கு உயர் பண்புடையவர் இவர்.

முட்டை சைவமானது போல, கெட்ட பழக்கங்கள் என்று வரையறைப் படுத்தும் பல பழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் நல்ல பழக்கங்கள்தான் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்ட போதிலும், எந்தத் தீய பழக்கத்தையும் பழகாமல், ஒரு தபஸ்வியின் வாழ்வுக்குச் சமமான ஒழுக்கத்துடன் இருக்கிறார் இவர்.

எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன் நான். இவரோ, அதைத் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் செய்வதால் என்னை பிரமிக்க வைக்கிறார்.

பயணம் முழுவதும் எல்லாருமேஹ்யூமர்சென்ஸோடு பலவிஷயங்களைப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தோம். ‘ஹ்யூமன்சென்ஸோடு சிந்தித்துக் கொண்டும் வந்தவர் இவர் மட்டும்தான்.
பணியின் நிமித்தம் தவறுகள் நடக்கும் துறைகளுக்கெல்லாம் செல்ல வேண்டியிருப்பினும், பொது இடத்தில் குப்பை போடும் சாமான்யன் முதல், நாட்டையே நாசமாக்கும் பலதரப் பட்ட மக்களைச் சந்தித்தாலும் எதிலும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் தன்னிலையில் வாழும் ஒருவராய் இவர் இருப்பதில் இவர் எங்கோ உயர்ந்து நிற்கிறார்.

இவரது பதிவுகள் இவரது திறமையைத்தான் வெளிக்காட்டும். பழகிப் பாருங்கள்.. இவரது மனிதத்தை நீங்கள் உணரமுடியும்.
இவரை இவ்வளவு நான் சிலாகிக்கக் காரணம், பல இடங்களில் பல பொழுதுகளில் நம்மை ரௌத்ரப் படுத்தும் நிகழ்வுகள் நடக்கையில் மனதிற்குள் வெம்பி, விம்மி அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் என் எண்ணமொத்த நண்பர்களோடு பகிர்ந்து கொள்பவன். இவரோ, அதை அங்கேயே தட்டிக் கேட்டு செயலில் இறங்க முயற்சிப்பவர்.
எல்லாருக்கும் பல விஷயங்களுக்காகநாம் நல்லவன்தான்என்ற எண்ணமேற்படும். அப்படி என்னை நானே நல்லவன் என்று சொல்லிக் கொண்டால், நான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை இவரோடு இருந்த இரு நாட்களில் உணரமுடிந்தது.
தனிமனித ஒழுக்கத்தால் தேசத்தில் மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கையில் எப்போதும் மாற்றமில்லை. ஆனாலும் அவ்வப்போது, அங்கங்கே நடக்கும் சில ஒழுக்க மீறல்களும், அந்த ஒழுக்க மீறல்களில் சேராமல் ஒதுங்கி நாம் நிற்கையில் வேற்றுகிரக வாசியைப் போல நம்மீது வீசப்படும் பார்வைகளும் என் நம்பிக்கையின் ஆணிவேரை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முற்பட்டிருக்கிறது. ஆனால் செல்வேந்திரனைப் போல ஒருவரைப் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை பலப்பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார் தேசத்தை மாற்ற. அந்த நூறு இளைஞர்களிடம் இருக்க வேண்டிய கனல், இவர் ஒருவரிடமே உண்டு. ஆனால் காலம் மாறிவிட்டதல்லவா... இப்போது இவரைப் போல நூறு இளைஞர்கள் தேவையாயிருக்கிறது இந்த தேசத்தை மாற்ற.
இவற்றைத் தவிர இவரொரு சிறந்த படிப்பாளி, படைப்பாளி. விகடனில் இவரது படைப்பானமுடியலத்துவம்பல வாரங்கள் வந்துகொண்டிருந்தபோது, வாங்கியவுடன் படிக்கும் பக்கமாக அது இருந்தது. இவரெழுதியசெல்லெனப்படுவதுஎனும் கதையா... கட்டுரையா என்ற கட்டுக்குள் அடங்காத படைப்பொன்று சுஜாதாவால் கவரப்பட்டுயார்யா அவன்? இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் பண்ணுங்கப்பாஎன்று அவர் அழைத்துச் சொல்லும் வண்ணம் அமைந்தது.

நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிப் படிக்கிறார். பாராட்டுகிறார். ‘நிறைய கவிதைத் தொகுப்புகள் வெளிவருவதை நான் தடுத்திருக்கிறேன்என்று இவர் சொல்வதன் மூலம், பிடிக்காத படைப்புகளை காலில் போட்டு நசுக்கத் தயங்காத ஆண்மை இவருக்குண்டு என்பதையும் அறிந்தேன்.

நானெல்லாம் ஏதாவது எழுதவேண்டியிருந்தால் மனதிற்குள் எழுதிப்பார்த்து, கணினியில் ட்ராஃப்ட் எழுதி, படித்துத் திருத்தி வெளியிடுவேன். இவர் பேசுவதெல்லாமே ஒரு படைப்புக்குரிய தகுதியோடுதான் இருக்கின்றன.

ஒருமுறைஇப்படிப்பட்ட அறிவியல் சாதனம் வராதாஎன்று ஓரிரு சாதனங்கள் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா... ‘ஹியரிங் ரைட்டர்மாதிரி நாம் பேசினாலே கிரகித்துக் கொண்டு எழுத்துக்களாய் எழுதிவிடும் ஏதேனும் கண்டுபிடிப்பு வந்தால் (வந்துடுச்சா?) இவருக்குப் பரிசளிக்கலாம். எக்கச்சக்க படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
யாரோடாவது ஏதாவது கூட்டுவிவாதம் நிகழ்த்தும்போதுஇல்லல்ல.. அது அப்படியில்லஎன்று எதிர்வாதம் வருவது வழக்கம். இவர் பேசும்போது மட்டும், நாங்கள் கேட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது.
என் நண்பன் செந்தில் ஒருமுறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதாவதுதிடீரென்று நீங்கள் பெண்ணாக மாறிவிடுகிறீர்கள் என்றால் உங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களில் யாரைக் காதலிப்பீர்கள்?’ என்று. அப்போதைக்கு அப்படி யாருமே இல்லை என்றேன். இப்போது என்னால் சொல்லமுடியும்!
இரண்டுநாள் எங்கே போனீர்கள்என்று கேட்பவர்களிடமெல்லாம், டூருக்கு, ஊட்டிக்கு என்பதையெல்லாம் விடுத்து, இவரைச் சந்தித்ததைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் எந்தச் சூழலிலும், எந்த நிலையிலும் இப்போது இருக்கும் வீரியம் குறையாதிருந்து தன்னாலான மாற்றத்தை இந்த இளைஞர் ஏற்படுத்துவார் என்பதை நினைக்கையில் மிகப் பெருமிதமாய் இருக்கிறது.
பயணத்தில் பல முறை நாங்களெல்லாம் பயன்படுத்திய வார்த்தைச்சான்ஸே இல்ல!’ ஆனால் இவரைப் பார்த்தபின் தோன்றுகிறது.. சான்ஸ் இருக்கு!
இந்தப் பதிவைப் பார்த்தும் அவர் கோபப்படுவார். ‘எதுக்கு இவ்ளோ பாராட்டணும்என்பதான கோபமாக அது இருக்காது. ‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சேஎன்பதான கோபமாகத்தான் அது இருக்கும்.

அதுதான் செல்வேந்திரன்!


விஜய் டிவி
யின் நீயா நானா? வில் நம் சமூகத்தை சேர்ந்த திரு.செல்வேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் நீங்களும் கண்டு கேட்டு வாழ்த்துங்கள்!





No comments: