தமிழர்கள் என்றென் றைக்கும் பெருமைப்படத்தக்க புதல்வர்கள் பலர் உண்டு அதில் குறிப்பிடத்தக்கவர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டி யார்! அவரின் பிறந்த நாள் இந்நாள் (1892).
சென்னை சட்டமன்ற உறுப்பினர், டில்லி அசம்பிளி உறுப்பினர், டில்லி அசம்பிளி யின் தலைவர் (சபாநாயகர்), கொச்சியின் திவான், இந்தி யாவின் முதல் நிதி அமைச் சர், அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்ற அணி கலன்கள் சூட்டப் பெற்ற அரும் பெரும் தமிழர் இவர்.
1932இல் கனடா நாட்டின் ஒட்டவாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் இந்தியத் தூதுக் குழுவின் தலைவர், 1938இல் ஜினிவா வில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியத் தூதுக் குழுவின் உறுப்பினர், 1941-42இல் அமெரிக்காவில் யுத்த தளவாடங்கள் வாங்க அனுப்பப்பட்ட இந்திய அரசின் தூதுக் குழுவின் தலைவர், இன்னும் இதுபோன்ற எத் தனையோ பதவிகளைப் பெற்றவர் என்பதைவிட, இந்தத் தமிழ்ப் பெருமகனால் அந்தப் பதவிகள் ஒளி வீசின!
மற்ற மற்ற துறைகளுக் கான அமைச்சர்களின் பட்டியல் தயாராகி விட்டது - நிதித் துறையைத் தவிர; கடைசியில் ஆர்.கே. சண் முகம்தான் மிகவும் பொருத் தமானவர் என்று முடிவு செய்யப்பட்டது. காந்தியார் அவர்களின் ஆதரவும் இருந்தது. இவ்வளவுக்கும் ஆர்.கே.எஸ். காங்கிரஸ்காரர் அல்லர்; அதையும் தாண்டி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால், அங்குதான் ஆர்.கே.எஸ். அவர்களின் தனித் திறன் ஜொலிக்கிறது.
டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ்காரர் அல்லர்; அவர்தான் சட்ட அமைச்ச ராக நேரு அமைச்சரவையில் ஒளி வீசினார்.
இந்தச் சிறப்புகள் ஒரு புறம். அவரது இன்னொரு பக்கம் அடிப்படையில் சுய மரியாதை இயக்கத்தவர் - பார்ப்பனர் அல்லாதார் உணர் வில் ஓங்கி வளர்ந்தவர்.
1930இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் தலைவர் ஆர்.கே.எஸ். தான். தமிழி சையை வளர்த்ததில் அவருக்குரிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.
ஆர்.கே.எஸின் சீர்தி ருத்த உணர்வைக் கண்டு காந்தியாரே, இதில் உமக்குக் குருநாதர் யார் என்று கேட்டபோது, ஈ.வெ.ரா.தான் என்று கூறி இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் தந்தை பெரியார் - காந்தியார் சந்திப்பு 1927இல் பெங் களூரில் நடைபெற்றது.
1.8.1937இல் குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு சேதி; இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டி யார் நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசி யலைப் பொறுத்தவரையில் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒன்று சேர்ந்து வேலை செய்யாமல் போய் விட்டாலும், சமுதாய சம்பந்த மான எல்லாக் காரியங் களிலும் இனி ஒன்றாயிருந்து வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டனர்.
அடுத்த வாரக் குடி அரசில் நமது குறிக்கோள் என்ற தலைப்பில் பிராமணீ யத்தை வெறுப்பவர்கள் தங்கள் பெயரை அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. அதன்படி வரவும் தொடங் கிற்று. இத்தகைய சுயமரியா தைச் சுடர் 61 வயதிலேயே அணைந்து விட்டதே!
வாழ்க ஆர்.கே.எஸ்.!
-மயிலாடன்