1944 ம் வருடம் நடந்த பிரிட்டன்வுட்ஸ் மாநாட்டின் பொது உலக அறிஞர்களுடன் ஆர்.கே எஸ்
(வலமிருந்து இரண்டாவது)
டாக்டர் ஆர் கே சண்முகனார் ஒரு சகாப்தம் (17/10/1892 -05/05/1953)
டாக்டர் ஆர் கே சண்முகனார் அவர்களின் 120 வது பிறந்தநாள் வரும் அக்டோபர் 17 ம் தேதி. டாக்டர்.ஆர் கே எஸ் 1920 ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும்,1924 ல் எம் பி ஆகவும் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.காந்தியடிகள்,தந்தை பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.1933 ல் பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றி இந்திய ஆங்கிலேய முக்கியஸ்தர்கள் இவரின் அறிவாற்றலைக் கண்டு வியக்கவும்,பொறாமைப் படவும் செய்தது.
பொதுமக்களுக்கு சேரவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து சென்றபோது அதனை பிரிட்டிஷ் அரசிடம் நேரடியாகசென்று வாதாடி இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.அந்தப் போராட்டம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது ஆச்சர்யம்தான்.அந்த காலகட்டத்தில் இந்தியா மிகவும் வறுமைனாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொடிருந்த நேரம் . இதனை விவசாய நிபுணர் எம் எஸ் சுவாமிநாதனும் பலமுறை கூறியுள்ளார்.அந்த நேரத்தில் பொருத்தமான நிதியமைச்சர் ஆர் கே எஸ் தான் என்று மகாத்மா காந்தியால் மகுடம் சூட்டப் பெற்றவர் ஆர் கே சண்முகனார்.ஆனால் அவருக்குப் பிறகு அவர் பெயரை கூறக்கூட தகுதியில்லாதவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர்.
தற்போது தமிழ் தமிழ் என்று மூச்சக்கு முன்னூறு தடவை சொல்லிவிட்டு தமது பிள்ளைகளை காண்வென்டில் சேர்க்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் ,அன்றைய காலகட்டத்தில் பலரின் எதிர்ப்புகளையும் கடந்து தமிழிசைச் சங்கத்தை துவக்கினார்.தமிழிசை சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.கொச்சி திவான் போன்ற சுமார் 200 பதவிகளுக்கும் மேல் தமது 60 வயதுக்குள் வகித்து அந்தப் பதவிகள் அவரால் பெருமை பெற்றன என்றால் மிகை ஆகாது.
ஆர் கே சண்முகனார் நினைவைப் போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment