Wednesday, October 19, 2011

ஆர்.கே.எஸ் 120

Dr.சை வே.சிட்டிபாபு அவர்கள்
ஆர்.கே.எஸ் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.
விழாவுக்கு வந்து சிறப்பித்த Dr.S.V C.க்கு மூத்த தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் பொன்னாடை அணிவிக்கிறார்.

Monday, October 17, 2011

விடுதலை செய்தி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர்கள் என்றென் றைக்கும் பெருமைப்படத்தக்க புதல்வர்கள் பலர் உண்டு அதில் குறிப்பிடத்தக்கவர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டி யார்! அவரின் பிறந்த நாள் இந்நாள் (1892).

சென்னை சட்டமன்ற உறுப்பினர், டில்லி அசம்பிளி உறுப்பினர், டில்லி அசம்பிளி யின் தலைவர் (சபாநாயகர்), கொச்சியின் திவான், இந்தி யாவின் முதல் நிதி அமைச் சர், அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்ற அணி கலன்கள் சூட்டப் பெற்ற அரும் பெரும் தமிழர் இவர்.

1932இல் கனடா நாட்டின் ஒட்டவாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் இந்தியத் தூதுக் குழுவின் தலைவர், 1938இல் ஜினிவா வில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியத் தூதுக் குழுவின் உறுப்பினர், 1941-42இல் அமெரிக்காவில் யுத்த தளவாடங்கள் வாங்க அனுப்பப்பட்ட இந்திய அரசின் தூதுக் குழுவின் தலைவர், இன்னும் இதுபோன்ற எத் தனையோ பதவிகளைப் பெற்றவர் என்பதைவிட, இந்தத் தமிழ்ப் பெருமகனால் அந்தப் பதவிகள் ஒளி வீசின!

மற்ற மற்ற துறைகளுக் கான அமைச்சர்களின் பட்டியல் தயாராகி விட்டது - நிதித் துறையைத் தவிர; கடைசியில் ஆர்.கே. சண் முகம்தான் மிகவும் பொருத் தமானவர் என்று முடிவு செய்யப்பட்டது. காந்தியார் அவர்களின் ஆதரவும் இருந்தது. இவ்வளவுக்கும் ஆர்.கே.எஸ். காங்கிரஸ்காரர் அல்லர்; அதையும் தாண்டி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால், அங்குதான் ஆர்.கே.எஸ். அவர்களின் தனித் திறன் ஜொலிக்கிறது.

டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ்காரர் அல்லர்; அவர்தான் சட்ட அமைச்ச ராக நேரு அமைச்சரவையில் ஒளி வீசினார்.
இந்தச் சிறப்புகள் ஒரு புறம். அவரது இன்னொரு பக்கம் அடிப்படையில் சுய மரியாதை இயக்கத்தவர் - பார்ப்பனர் அல்லாதார் உணர் வில் ஓங்கி வளர்ந்தவர்.

1930இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் தலைவர் ஆர்.கே.எஸ். தான். தமிழி சையை வளர்த்ததில் அவருக்குரிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.

ஆர்.கே.எஸின் சீர்தி ருத்த உணர்வைக் கண்டு காந்தியாரே, இதில் உமக்குக் குருநாதர் யார் என்று கேட்டபோது, ஈ.வெ.ரா.தான் என்று கூறி இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் தந்தை பெரியார் - காந்தியார் சந்திப்பு 1927இல் பெங் களூரில் நடைபெற்றது.

1.8.1937இல் குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு சேதி; இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டி யார் நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசி யலைப் பொறுத்தவரையில் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒன்று சேர்ந்து வேலை செய்யாமல் போய் விட்டாலும், சமுதாய சம்பந்த மான எல்லாக் காரியங் களிலும் இனி ஒன்றாயிருந்து வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டனர்.

அடுத்த வாரக் குடி அரசில் நமது குறிக்கோள் என்ற தலைப்பில் பிராமணீ யத்தை வெறுப்பவர்கள் தங்கள் பெயரை அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. அதன்படி வரவும் தொடங் கிற்று. இத்தகைய சுயமரியா தைச் சுடர் 61 வயதிலேயே அணைந்து விட்டதே!

வாழ்க ஆர்.கே.எஸ்.!

-மயிலாடன்

Sunday, October 16, 2011

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 120 பிறந்தநாள் விழா

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்,தமிழிசைச் சங்கத்தலைவர்
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 120 பிறந்தநாள் விழா
இடம்:ராஜா அண்ணாமலை மன்றம் நாள்- 17-10-2011 நேரம் காலை 9-00 மணி

தலைமை :பேராசிரியர்.சை வே. சிட்டிபாபு MA.,BT., DLitt அவர்கள்
மற்றும் வாணியர் சங்க நிர்வாகிகள்

தமிழ் தமிழ் என்று தன் உயிர் மூச்சாய் இருப்பதுபோல் நடித்துக் கொண்டிருப்போர் மத்தியில் தான் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவராய் இருந்தபோதும் தமிழகத்தில் தமிழுக்கும் தமிழிசைக்கும் ஏற்பட்டிருந்த அவமானத்தைப் போக்க பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.அவரால் தமிழிசை வளர்ந்தது.ஒருசமயம் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டு இருந்து தமிழை புறக்கணித்துவந்த நிலையில் ஆர்.கே .எஸ் அவர்கள் ராஜா சர்.அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து தமிழிசை சங்கத்தை தோற்றுவித்தனர் .
தமிழிசைச்சங்கம் தோன்றியதன் காரணம் ஒரு சிறிய வரலாறு:ஆதாரம் குடியரசு பத்திரிகை 25/12/1943
தமிழ்நாட்டில் தமிழர்களிடையே தமிழில் பாட்டுப்பாட முடியாது என்று கூறும் அளவுக்குத்
துணிவு கொண்டவர் களும் இத்தமிழ்நாட்டில் இருந்து வருகின்றனர். தமிழில் தமிழ்ப்பாட்டுப் பாட
வேண்டும் என்று கேட்கும் தமிழர்களை எதிர்த்து நடக்கத் துணிவு கொண்டவர்களுக்கும் தமிழ்நாடு
இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்.
தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை நையாண்டி செய்து, அவ்வாறு கூறுவதும்
கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவு கொண்ட கூட்டத்தினருக்கும்
இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, தமிழர்கள்
வாழும் நாட்டில் தமிழில் பாடுவதற்குப் பெருஞ் செல்வர்களின்- இராஜாக்களின் முயற்சியும்
ஆதரவும் கூட்டுறவும் வேண்டப்படுகின்றன. அந்தோ! தமிழர்கள் அடைந்துள்ள கேவல நிலைமைதான்
என்னே!’ என்று 25.12.1943ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏடு மனங்கொதித்து எழுதியது.

மியூசிக் அகாதமியும் பார்ப்பனச் சூழ்ச்சியும்
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் (திசம்பரில்) சென்னை மாநகரெங்கும் இசையரங்குகள்
களைகட்டத் தொடங்கிவிடும். இராதாகிருட்டிணன் சாலையில் அமைந் துள்ள ‘மியூசிக் அகாதமி’
கட்டடம் பெரும்பாலும் இன்று பார்ப்பனர்களின் ஆளுகைக்கு உட்பட்டு உள்ளது. மியூசிக் அகாதமி
தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லை.
1927ஆம் ஆண்டு திசம்பரில் சென்னையில் இந்திய தேசியக் காங்கிரசு மாநாடு நடந்து
முடிந்தது. அந்த மாநாட்டுக்கெனத் திரட்டப்பட்ட தொகையில் செலவு போக ஒரு பகுதி
மிஞ்சியது. அந்தத் தொகையில் நிறுவப்பட்டதுதான் மியூசிக் அகாதமி. 1928ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், கர்நாடக இசையை மட்டுமன்றி செவ்வியல் நாட்டியக் கலை
எனப்படும் பரதநாட்டியத்தையும் வளர்ப்பதாகும்.
கோவில்களிலும், பண்ணையார் வீடுகளிலும் தேவ தாசிகள் எனப்பட்ட பார்ப்பனர் அல்லாத பெண்களால்
ஆடப்பட்டு வந்த சதிர் எனப்படும் பரதநாட்டிய ஆட்டம் தேவதாசி முறை ஒழிப்புக்குப்பின்
பெரும்பாலும் பார்ப்பன உயர்சாதிப் பெண் களிடமே போய்ச் சேர்ந்தது.

சர். ஆர்.கே. சண்முகம் தமிழிசைப் பணி
சர். ஆர்.கே. சண்முகம் கோவையில் ஒரு கொடைப் பண்புள்ள வளமான குடும்பத்தில் பிறந்து
வழக்கறிஞரா னவர். 1920இல் தமது 28ஆம் வயதிலேயே சென்னை சட்டமன்ற உறுப்பினர். 1923இல்
மத்திய சட்டசபைத் தேர் தலில் சுயேச்சையாய் நின்று வென்றவர். 1934இல் கொச்சி சமஸ்தானத்தின்
திவான். 1946இல் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையின் நிதியமைச்சர். பெரியாரால்
சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டப்பட்டவர்; அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்;
வகுப்புவாரிக் கொள்கை யில் பெரும் பற்றுக் கொண்டவர். கொச்சி சமஸ்தானத்தில் அதனை
நடைமுறைப்படுத்தியவர்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆர்.கே. சண்முகம் ஒருமுறை சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு
விழாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டார். அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஆண்டு விழாவைத்
தொடங்கி வைக்க அழைக்கப்பட்ட முதல் பார்ப்பனர் அல்லாத தலைவர் அவர் தான். அந்நிகழ்வில்
நிறுவனத்தின் செயலாளர் கோபால கிருஷ்ணராவ் என்பவர் தமது வரவேற்புரையில் ‘திவான் சர்.
ஆர்.கே. சண்முகம் செட்டியார் பாரத மாதாவின் அருமந்த புதல்வர்களில் ஒருவர்’ என்று
குறிப்பிட்டு வரவேற்றார்.
அங்குக் குழுமியிருந்த பார்ப்பனர்களுக்கு இப்புகழ் மொழிகளைப் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. அவர்கள் ‘அவர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூறியதை திரும்பப் பெறுங்கள்’
என இடைவிடாமல் கூச்சலிட்டனர். ‘வெட்கம்’, ‘வெட்கம்’ என்று ஒலி எழுப்பி இழிவு செய்தனர்.
தமிழிசைக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும் என்கிற அசையாத மன உறுதியோடு வினையாற்றிய ஆர்.கே.
சண்முகம் 1942இல் அண்ணாமலை அரசருடன் இணைந்து தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.
தமிழிசை வளர்ச்சிக்கும் தமிழாராய்ச்சிக்கும் தன்னேரிலாத தொண்டாற்றினார்.

சென்னையில் 4.1.1944 அன்று செயிண்ட் மேரீஸ் அரங்கில் கே.பி. சுந்தராம்பாள் பங்கேற்ற இசை
நிகழ்ச்சி ஒன்றின் பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆர்.கே. சண்முகம், “நமது
இசைவிழாவில் கலந்துகொண்ட வித்வான் களுக்கெல்லாம் நாங்கள் தனிப்படையான நன்றியைச் செலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறோம். இந்த விழாவிற்கு ஏற்பாடு கள் செய்யத் தொடங்கிய போது கச்சேரிகளில்
பாடுவதற்குப் பாடகர்கள் முன்வருவார்களோ? என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டிருந்தது. நம்முடைய
இயக்கத்திற்கு விரோதமான சில வித்வான்கள் நம்முடைய விழாவைத் தடுப்பதற்கு எவ்வள வோ
முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் நாங்கள் இதற் கெல்லாம் பயப்படவில்லை. எந்தவிதத்திலாவது
கச்சேரிகளை நடத்தி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம். எந்தப் பாடகர்களும்
வரமாட்டேன் என்று சொல்லி இருந் தாலும், கடைசி முடிவில் இராஜா சர். அண்ணாமலை செட்டி
யாரவர்களும் நானும் மேடையிலேறிப் பாடிவிடுவதென்றும் கூடத் தீர்மானித்தோம். சென்ற 12
தினங்களாக ஆயிரக் கணக்கான தமிழ் மக்களுக்கு இந்த மேடையிலிருந்து தமிழ் இசை இன்பத்தை
ஊட்டிய எல்லாப் பாடகர்களுக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்
கிறார்கள். தமிழில் கச்சேரிகள் செய்யப் போதுமான உருப் படிகள் இல்லை’ என்று சாதித்துக்
கொண்டிருக்கும் எதிரி களுக்கு நம்முடைய இசைவிழாவே தகுந்த பதில் ஆகும்” (குடிஅரசு
22.1.1944) என்றெல்லாம் பேசித் தம் தாளாத தமிழிசை வேட்கையைப் பதிவு செய்தார்.
பெரியாரும் தமிழிசையும்
எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுகிறதோ, உரிமைக்கு ஊறு நேருகிறதோ அங்கெல்லாம்
பெரியாரின் பெருங்குரல் உரத்து ஒலிக்கும். 1938இல் தமிழகம் கண்ட முதல் இந்தி எதிர்ப்புப்
போர் ஆதிக்கக் கோட்டைகளில் உடைப்பை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்டவர்கள் நிகழ்த்திய உரிமைப்
போராகும். இதே தன்மையில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழிசை இயக்கத்திற்குத்
தன் பங்களிப்பை வழங்கியுள்ளது.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார்,
ஈழத்தடிகள் போன்ற எண்ணற்ற பெருமக்கள் தாம் பணியாற்றிய தளங்களில் எதிர்எதிர் முனைகளில்
இருந்தாலும் ஆதிக்க இந்தியை எதிர்ப்பதில் ஒரே புள்ளியில் நின்றார்கள்.
1941 முதல் 1943 வரை தமிழகத்தில் வீச்சோடு முன் னெடுக்கப்பட்ட தமிழிசை இயக்கப்
பணிகளிலும் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்,
திரு.வி.க. மயிலை சிவமுத்துக்குமாரசாமி, தேவநேயப் பாவணர், மு. வரதராசனார்,
மீனாம்பாள் சிவராஜ், எம்.கே. தியாகராய பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் உள்ளிட்ட ஏராளமான
பேர் தமிழிசை இயக்கத்தை வீச்சோடு முன்னெடுத்துள்ளனர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை,
தேவக்கோட்டை, கும்ப கோணம் போன்ற இடங்களில் தமிழிசை இயக்க மாநாடு களும் கூட்டங்களும்
நடத்தப்பட்டுள்ளன.
பிறிதோர் இடத்தில் தமிழ்நாட்டில் திரைப்படம், நாடகம், பாட்டு ஆகிய மூன்று துறையும்
தமிழினத்துக்கு மிகமிகக் கேடாகிவிட்டதைச் சுட்டிக்காட்டிவிட்டு,
‘ஆகவே, மேற்கண்ட மூன்று துறைகளையும் பொது ஜனங்கள் தங்கள் தணிக்கைக்குக் கீழ் கொண்டு வந்து,
அவைகளுக்கு ஒழுங்கான முறையில் நடக்கச் செய்ய முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியமான
காரியமாகும். இதற்கு ஸ்தாபனங்கள் இருந்தால்தான் முடியும். ஆதலால் மேலே காட்டியபடி அதாவது
1. சினிமா, நாடகம் பார்க்கிறவர்கள் கழகம் (சங்கம்)
2. இசை நுகர்வோர் (பாட்டுக் கச்சேரி கேட்கிறவர்கள்) கழகம் (சங்கம்)
3. பத்திரிக்கையாளர் படிப்போர் கழகம் (சங்கம்)
என்பவைகளை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாத தாகும். (குடிஅரசு 4.12.1943)
“தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது நமது கடமை. இன்று
இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாட வேண்டியதாக
ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குத் தமிழனிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும். இது பெரிய மாறுதல்
தான்” என்று கூறும் பெரியார் தமிழிசை இயக்கத்திற்காகப் பாடுபட்ட அண்ணாமலை அரசரையும்
ஆர்.கே. சண்முகத்தையும் பாராட்டினார். அதே நேரத்தில்,
“கோடீசுவரரும் கோணாத கை கொடை வள்ளலும் மிக்க மதிவாணருமான இராஜா சர். அண்ணாமலை
அவர்களும், பேரறிஞரும் மலையாடும் படியான வாயாடிகளும் கருத்தாளர்களும் மெச்சும் மதி
அரசர் சர். சண்முகம் அவர்களும் நம் சமுதாயத்தில் 4ஆம் சாதி 5ஆம் சாதியாக மதிக்கப்படவும்,
அவ்வாறே பெரிதும் நடத்தப்படவும் காரணம் என்ன? ஏன் நடத்தப்பட வேண்டும்?” என்ற வினாவையும்
உடன் எழுப்புகிறார். அந்த அளவுக்கு ஜாதிவெறி நிலைகொண்டிருந்தது என்பதே பெரியாரின் கோபத்துக்கு காரணம்.
இந்தக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் அந்தக் காலகட்டத்தில் கோட்டீஸ்வரர்கள் அக இருந்தும் நம் தமிழுக்காக எவ்வளவு அவமான படுத்தப் பட்டார்கள்.
அதையும் தாண்டி அவர்கள் எதிர்ப்புகளை தாண்டி போரடி வெற்றிபெற்றார்கள் என்பதை ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் 120 வது பிறந்தநாளில் நம் சமுதாயம் உணர்ந்து நாமும் தமிழ் சமுதாயத்திற்கு கடமையாற்ற உறுதி கொள்ள வேண்டும் .

Wednesday, October 12, 2011

தினமணி செய்தி


தினமணி செய்தி : நாள்-13/10/2011
தினமணி 12/10/2011 கட்டுரை
தமிழனைத் தலைகுனிய வைத்தவர்கள்!

First Published : 12 Oct 2011 03:28:59 AM IST


இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர். இந்தியாவின் கடைசி கவர்னர்-ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிரமணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக என். சிவராஜ் போன்றோர் பதவி வகித்து அப்பதவிகளுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் எனக் கருதப்படும் அலைக்கற்றை ஊழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் முக்கியப் பங்கு வகித்திருப்பது, என்றும் மாறாத தலைக்குனிவைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. ராசா அலைக்கற்றையை அளிப்பதில் கையாண்ட முறை ஊழல் நிறைந்தது. இதன் விளைவாக, அரசுக்கு வரவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதையொட்டி பெரும் அமளி ஏற்பட்டது. இவ்வளவும் பகிரங்கமாக வெளியான பிறகும் அமைச்சர் ராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகி இருக்கும்படி அவருக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஆணையிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்னையில் தலையிட்டு விசாரணையைத் தானே நேரடியாக மேற்கொள்ள நேரிட்டிருக்காது. ராசா பதவியில் தொடர்வதை உச்ச நீதிமன்றம் கண்டித்தப் பிறகே அவரைப் பதவி விலக பிரதமர் அனுமதித்தார் என்பது வெட்ககரமானது. ஆ. ராசா, கனிமொழி மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும்போதே மற்றொரு மத்திய அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நிதியமைச்சகத்தின் துணைச் செயலராக உள்ள ராவ் என்பவர் பிரதமரின் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பிய ரகசியக் குறிப்பு அவர் மட்டுமே தயாரித்தது அல்ல. மாறாக, தொலைத் தொடர்புத் துறை, சட்டத்துறை, நிதித்துறை ஆகியவற்றின் செயலர்களும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலரும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சரவைச் செயலர் தலைமை வகித்திருக்கிறார். ராவ் தயாரித்த குறிப்பில் நிதித்துறை 12 அம்சங்களைக் குறிப்பிட்டது. அதற்கு மேல் 14 அம்சங்களை அமைச்சரவை செயலகம் சேர்த்தது என்றும் திட்டவட்டமான தகவல்கள் கூறுகின்றன. அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம் ஆவார். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்தும், அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை. இந்த மாபெரும் ஊழலை அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால் அப்போதே தடுத்திருக்கலாம் என தனது குறிப்பில் ராவ் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது ஆகும். முளையிலேயே கிள்ளி எறித்திருக்கக்கூடிய இந்த ஊழல் முள்செடியை மரமாக வளர அனுமதித்தது ப. சிதம்பரமே என்பது தெளிவாகத் தெரிகிறது. பதவியில் மிக இளையவரான ராசா மட்டுமே இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. எனவே, ஆ. ராசா செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் அனைத்திலும் ப. சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு எனக் கருத வேண்டியுள்ளது. சிதம்பரம் நிரபராதியாக இருந்தால் இந்த ஊழலைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும் அதைப் பயன்படுத்தாதது ஏன்? அவ்விதம் அவர் செயல்பட முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தால், அவரை முடக்கிய அதிகார சக்தி எது? இந்தக் கேள்விகளுக்குரிய விடையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை சிதம்பரத்துக்கு உண்டு. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆ. ராசாவும், ப. சிதம்பரமும் தன்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக 4-7-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எனவே 2001-ம் ஆண்டு விலையில்தான் அலைக்கற்றை விற்பனை நடக்கப்போகிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் இருக்க வேண்டும். சிறந்த பொருளாதார நிபுணர்களான அவர்கள், இதனால் நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்பதையும் கணித்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த ஊழல் நடைபெறுவதைத் தடுக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவ்வாறு செய்யவிடாமல் அவர்களைக் கட்டிப் போட்ட சக்தி எது? நிதியமைச்சகத்தின் இந்தக் குறிப்பு வெளியான பிறகும் மத்திய புலனாய்வுத் துறை இதுவரை ப. சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரிடம் பெயரளவுக்குக் கூட விசாரணை நடத்தவில்லை. பிரணாப் முகர்ஜிக்கும் ப. சிதம்பரத்துக்கும் இடையே உள்ள பிரச்னைபோல இது திட்டமிட்டுச் சித்திரிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் குறித்து எல்லாம் தெரிந்திருந்தும் அதைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருந்தும் அதை ஏன் ப. சிதம்பரம் தடுக்கவில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, இரு அமைச்சர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல இது. இதற்கிடையில் சிறையில் உள்ள ஆ. ராசா பிரதமரையும், ப. சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின்முன் வைத்துள்ளார். பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராசாவைப் பின்னிருந்து இயக்கிய சக்தி எது என்பது அம்பலமானால் என்ன செய்வது என அவர்கள் பதைபதைத்துப் போனார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகியோர் நேர்மையற்ற வகையில் நடந்துகொண்ட விதம் இந்திய அரசியலில் தமிழகத்துக்கு இருந்த பெருமையை சீர்குலைத்துள்ளது. அலைக்கற்றை ஊழல் புகார் எழுந்தவுடன் பதவியை விட்டு விலகவும் விசாரணையை எதிர்கொள்ளவும் ஆ. ராசாவும் முன்வரவில்லை. ப. சிதம்பரமும் முன்வரவில்லை. போதாக்குறைக்குத் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவரான தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்திலேயே அலைக்கற்றை ஊழல் தொடங்கிற்று என்ற குற்றச்சாட்டு எழுந்து அதன்பேரில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ஆக, இந்தப் பெரும் ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவருமே தமிழர்களாக இருப்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. திட்டமிட்டே இந்த ஊழலை இவர்கள் செய்துள்ளனர் என்பது வெளிப்படையானது. மத்திய நிதியமைச்சர்களாக பிரதமர் நேருவின்கீழ் பதவி வகித்த ஆர். கே. சண்முகம் செட்டியார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது பதவிகளைத் துச்சமாக மதித்து தூக்கியெறிந்து விசாரணையை நெஞ்சுரத்துடன் நேர்கொண்டு தங்களின் தூய்மையை நிலைநிறுத்தினார்கள். சுதந்திர இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராகப் பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் 1948 பிப்ரவரியில் வரி ஏய்ப்பு தொடர்பான சில வழக்குகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்தார். இந்த வழக்குகள் நியாயமற்ற முறையில் தொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் நினைத்ததால் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே வரி ஏய்ப்புகள் தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்றை வரதாச்சாரி என்பவர் தலைமையில் இந்திய அரசு அமைத்திருந்தது. கமிஷன் விசாரணையில் இருந்த சில வழக்குகளைத் திரும்பப் பெற நிதியமைச்சர் சண்முகம் உத்தரவிட்டதன் விளைவாக, பிரச்னை எழுந்தது. கமிஷன் தலைவரான வரதாச்சாரியைச் சந்தித்து, தனது நடவடிக்கை குறித்து சண்முகம் விளக்கினார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பெரும் பிரச்னையாக ஆக்கினார்கள். உடனடியாக ஆர்.கே. சண்முகம் செட்டியார் தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து 1948-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியன்று விலகினார். பிரதமர் நேரு பதவி விலகலை ஏற்கத் தயங்கினார். மிகக் கடுமையான சூழ்நிலையில் சண்முகம் தன் பொறுப்பைத் திறம்பட நிர்வகித்ததாகவும் மிகுந்த வருத்தத்தோடு பதவி விலகலை ஏற்பதாகவும் அவருக்கு நேரு கடிதம் எழுதினார். அவரையடுத்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ஜான்மத்தாய் இந்த வழக்குகள் சம்பந்தமான கோப்புகள் முழுவதையும் பார்வையிட்டு சண்முகம் இதுதொடர்பாக எந்தத் தவறும் இழைக்கவில்லை எனப் பகிரங்கமாகக் கூறினார். அதைப்போல நிதியமைச்சராக டி.டி.கே. இருந்தபோது பிரதமர் நேருவின் மருமகனான பெரோஸ் காந்தி முந்திரா ஊழல் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். நொடித்துப்போன நிதிநிலைமையில் இருந்த முந்திராவின் நிறுவனங்களை மீட்பதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2 கோடியே 76 லட்சம் ரூபாய்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. தனி ஒரு மனிதரைக் காப்பாற்றுவதற்காக இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. இந்தப் பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வற்புறுத்தினார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அன்றாட நிர்வாகத்தில் நிதியமைச்சருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், நிதியமைச்சராக இருந்த டி.டி.கே. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கிணங்க 1958-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சக்ளா கமிஷனை பிரதமர் நேரு அறிவித்தார். அமைக்கப்பட்டு 50 நாள்களில் அந்தக் கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே நிதியமைச்சர் டி.டி.கே. பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிரதமர் நேருவுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், ""நிதித்துறைச் செயலர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் தார்மிகப் பொறுப்பு ஏற்கிறேன்'' என்று கூறி தனது கண்ணியத்தையும், நேர்மையையும் நிலைநாட்டினார். ஆர்.கே. சண்முகமும், டி.டி.கே.யும் மத்திய நிதியமைச்சர் பதவியைத் திறம்பட வகித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். ஆனால், ஜனநாயக நெறிமுறைகளை நிலை நிறுத்தவும் வெளிப்படையான, நேர்மையான, தூய்மையான நிர்வாகம் நடக்கவேண்டும் என்பதற்காகவும் தங்கள் பதவிகளைத் துறக்க முன்வந்ததன் மூலம் மக்களாட்சியின் மாண்பை பல படி உயர்த்தினார்கள். மேற்கண்ட இருவரையும் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பொறுப்பை வகித்த ப. சிதம்பரம் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் தனது கண்ணெதிரே நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததோடு, அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தது, அவரின் மீதான ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஊழலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சாதிக்க முயல்வதும் அவருக்குப் பிரதமர் நற்சான்றிதழ் வழங்குவதும் ஜனநாயக ஆட்சி முறையைக் கேலிக் கூத்தாக்கிவிட்டது. நிர்வாகத்தில் நேர்மை என்பதையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. ஆர். கே. சண்முகம், டி. டி. கே. ஆகியோர் தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகிய இரு தமிழர்கள் என்பதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
கருத்துகள்

டாக்டர் ஆர் கே சண்முகனார் அவர்களின் 120 வது பிறந்தநாள் வரும் அக்டோபர் 17 ம் தேதி அன்று வருகிற வேளையில் தமிழ்நாட்டின் தமிழனின் மரபினைக் காத்த ஆர் கே எஸ் போன்றோரின் வழிகாட்டுதலை இந்த நேரத்தில் பழநெடுமாறன் விளக்கியிருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது ஆகும்.ஆர் கே எஸ் பொதுமக்களுக்கு சேரவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து சென்றபோது அதனை பிரிட்டிஷ் அரசிடம் நேரடியாகசென்று வாதாடி இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.அந்தப் போராட்டம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது ஆச்சர்யம்தான்.அந்த காலகட்டத்தில் இந்தியா மிகவும் வறுமைனாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொடிருந்த நேரம் . இதனை விவசாய நிபுணர் எம் எஸ் சுவாமிநாதனும் பலமுறை கூறியுள்ளார்.அந்த நேரத்தில் பொருத்தமான நிதியமைச்சர் ஆர் கே எஸ் தான் என்று மகாத்மா காந்தியால் மகுடம் சூட்டப் பெற்றவர் ஆர் கே சண்முகனார்.ஆனால் அவருக்குப் பிறகு அவர் பெயரை கூறக்கூட தகுதியில்லாதவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர்.

By ப.தர்மலிங்கம்
10/12/2011 3:05:00 PM

டாக்டர் ஆர் கே சண்முகனார் 120 வது பிறந்தநாள்

1944 ம் வருடம் நடந்த பிரிட்டன்வுட்ஸ் மாநாட்டின் பொது உலக அறிஞர்களுடன் ஆர்.கே எஸ்
(வலமிருந்து இரண்டாவது)


டாக்டர் ஆர் கே சண்முகனார் ஒரு சகாப்தம் (17/10/1892 -05/05/1953)
டாக்டர் ஆர் கே சண்முகனார் அவர்களின் 120 வது பிறந்தநாள் வரும் அக்டோபர் 17 ம் தேதி. டாக்டர்.ஆர் கே எஸ் 1920 ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும்,1924 ல் எம் பி ஆகவும் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.காந்தியடிகள்,தந்தை பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.1933 ல் பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றி இந்திய ஆங்கிலேய முக்கியஸ்தர்கள் இவரின் அறிவாற்றலைக் கண்டு வியக்கவும்,பொறாமைப் படவும் செய்தது.
பொதுமக்களுக்கு சேரவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து சென்றபோது அதனை பிரிட்டிஷ் அரசிடம் நேரடியாகசென்று வாதாடி இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.அந்தப் போராட்டம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது ஆச்சர்யம்தான்.அந்த காலகட்டத்தில் இந்தியா மிகவும் வறுமைனாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொடிருந்த நேரம் . இதனை விவசாய நிபுணர் எம் எஸ் சுவாமிநாதனும் பலமுறை கூறியுள்ளார்.அந்த நேரத்தில் பொருத்தமான நிதியமைச்சர் ஆர் கே எஸ் தான் என்று மகாத்மா காந்தியால் மகுடம் சூட்டப் பெற்றவர் ஆர் கே சண்முகனார்.ஆனால் அவருக்குப் பிறகு அவர் பெயரை கூறக்கூட தகுதியில்லாதவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர்.

தற்போது தமிழ் தமிழ் என்று மூச்சக்கு முன்னூறு தடவை சொல்லிவிட்டு தமது பிள்ளைகளை காண்வென்டில் சேர்க்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் ,அன்றைய காலகட்டத்தில் பலரின் எதிர்ப்புகளையும் கடந்து தமிழிசைச் சங்கத்தை துவக்கினார்.தமிழிசை சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.கொச்சி திவான் போன்ற சுமார் 200 பதவிகளுக்கும் மேல் தமது 60 வயதுக்குள் வகித்து அந்தப் பதவிகள் அவரால் பெருமை பெற்றன என்றால் மிகை ஆகாது.
ஆர் கே சண்முகனார் நினைவைப் போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!