Saturday, September 1, 2012


சென்னை வணிக வைசிய கல்யாண  மண்டப நிர்வாக சங்கத்தின் சார்பில் 15-08-2012 சுதந்திரத் திருநாளன்று வாணியர் சங்கமம் இணையதள துவக்கவிழா !வாணியர் மலர் மாதஇதழ் வெளியீடு விழா ! 
ஜாதகப் பரிவர்த்தனை கூட்டம் ! என முப்பெரும் விழா நடைபெற்றது. நம் சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டு  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 


நவராக்ஸ் வி.ஸ்ரீதர் அவர்கள் இறைவணக்கத்துடன்,தேசபக்திப் பாடலையும் பாடி தேச உணர்வை வெளிப்படச்செய்தார். 


கல்யாண மண்டபச் செயலாளர் திரு.பி.என்.முத்துகுமாரன் செட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 
தலைவர் உயர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்

Tuesday, August 7, 2012

முப்பெரும் விழா அழைப்பிதழ்

சென்னை வணிக வைசிய கல்யாண  மண்டப நிர்வாக சங்கத்தின் சார்பில் வாணியர் சங்கமம் இணையதள துவக்கவிழா !
வாணியர் மலர் மாதஇதழ் வெளியீடு விழா ! 
ஜாதகப் பரிவர்த்தனை கூட்டம் !
முப்பெரும்  விழா நடைபெற உள்ளது .நம் சமூக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .


WEBSITE: வாணியர் சங்கமம்.காம்       e.mail:vaniyarsangamam@gmail.com

Tuesday, July 10, 2012

ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம் 15-08-2012
chennai vaniga vasiya kalyaanamandapam    


நடைபெறும் இடம் 
சென்னை வணிக வைசிய கல்யாண மண்டபம்,
113,பவழக்காரத் தெரு ,மண்ணடி ,சென்னை-600001 

Thursday, July 5, 2012


web: vaniyarsangamam.com    மணமக்கள் பதிவு நடைபெறுகிறது. மிக விரைவில் இணையதளத்தில் பார்க்கலாம்..



Thursday, June 7, 2012

வணிக வைசிய நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா

3-6-2012 அன்று நடைபெற்ற திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்களின் முத்துவிழாவை முன்னிட்டு வணிக வைசிய நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.நூலினை டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு M.A.B.T.D.Litt., அவர்கள் வெளியிட திரு எல்.பழமலை IAS.அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள்.திரு.மா.கோடிலிங்கம்அவர்கள் இறைவணக்கம் பாடி மகிழ்வித்தார்கள்.நல்லாசிரியர்.எம்.சிவகுருநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.புலவர்.பொன்னரசன்,அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் திரு.கோ.செல்வம் ,புலவர் எல்.கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,உயர்திரு வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த விழா மதிய உணவுடன் சிறப்பாக நிறைவுற்றது.
 .                             திரு எல். பழமலை ஐ.ஏ.எஸ்.அவர்கள் வாழ்த்துரை 



டாக்டர் .எஸ்.வி.எஸ் அவர்களுக்கு தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் பொன்னாடை அணிவிக்க சங்க பொருளாளர் திரு ஆர்.சண்முகம் செட்டியார் அவர்கள் கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.

திரு.மா.கோடிலிங்கம் அவர்கள் இறைவணக்கம் 
                                திரு.எம்.சிவகுருநாதன் அவர்கள் வரவேற்புரை 



  1. டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு M.A.B.T.D.Litt., அவர்கள் நூலினை வெளியிட திரு. எல்.பழமலை IAS.அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள்.

                               அனைத்து செட்டியார் முன்னேற்றப் பேரவை தலைவர் திரு கே.சி.அருணாசலம் செட்டியார் நூலினைப் பெற்றுக்கொள்கிறார்.




திரு.கோ.செல்வம் அவர்களுக்கு திரு.R. சண்முகம் செட்டியார்,T.S.சிவலிங்கம் ஆகியோர் மரியாதை செய்கின்றனர்.



                                     புலவர் பொன்னரசன் அவர்களுக்கு மரியாதை
                                     புலவர்.எல்.கேசவன் அவர்களுக்கு மரியாதை.

Monday, June 4, 2012

சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
 5-6-2012  அன்று மண்டப அரங்கத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதுபெரும் தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் மீண்டும் தலைவராகவும் .திரு பி.என்.முத்துகுமரன் செட்டியார் அவர்கள் மீண்டும் செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர் .பொருளாளராக திரு.ஆர்.சண்முகம் செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்.