Tuesday, January 26, 2010

ஆர்.கே.சண்முகம் செட்டியார்

VYWA Letter to Hon'ble Chief Minister




24 -01 -2010
மாண்புமிகு தமிழக முதல்வர்
தலைமைச்செயலகம்,
சென்னை.
(பொருள்
:கோவையில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் உருவச் சிலை அமைக்க வேண்டுதல்)

மாண்புமிகு
தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,
வணக்கம்.தங்களுக்கு தமிழின் மேல் உள்ள பற்றுக்கும் தாங்கள் ஆற்றிவரும் மக்கள் தொண்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரும்,மகாத்மா காந்தி,தந்தை பெரியார் ,நேரு, போன்ற பெருந்தலைவர்களின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்(1892-1953) அவர்கள்.ஆங்கிலேயர்களின் காலம் முதற்கொண்டு திராவிட இயக்கமுனோடிகளுடன் இணைந்து செயலாற்றியவர்.தந்தை பெரியாரின் வலதுகரமாக விளங்கியவர்.
அந்தக்காலத்தில் மேடைகளில் கர்நாடக இசை என்ற பெயரில் தெலுங்கு பாடல் பாடுவதையே உயர்வாக கருதிய நேரத்தில்,தாங்கள் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவழவிழாவில் கூறியது போல தமிழில் பாடுவதை தீண்ட தகாததாக பாவித்ததை கண்ட ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் ராஜா.சர்.அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து தமிழிசைச்சங்கம் உருவாக்கினார்.சிலப்பதிகாரத்துக்கு உரை இயற்றினார்.மேலும் இவர் தமிழுக்கும் நாட்டுக்கும் ஆற்றிய சேவை பாராட்டுக்குஉரியது.அவரைப்பற்றி எங்களைவிட தாங்கள் பலமடங்கு அறிந்தவர் .நேரிலும் சந்தி
த்திருப்பீர்கள்.
எனவே தற்போது நடைபெற இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது கோவையில்
ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் உருவச் சிலை அமைக்கவும்,சென்னையில் புதிய சட்டமன்ற வளாகத்தில் அவரின் உருவச்சிலை அமைக்கவும் தங்கள் வாக்கினாலேயே இந்த இனிப்பான செய்தி ஊடகங்களில் வர செய்வீர்கள் என்று காத்திருக்கும்.....

என்றும் அன்புடன்
P .தர்மலிங்கம்,
செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச்சங்கம்
314/151.டாக்டர்.நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி.சென்னை-600005

Friday, January 8, 2010

தமிழக அரசுக்கு வாணியர் இளைஞர் நலச் சங்கம் கோரிக்கை!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச்செயலகம்,
சென்னை.
அன்புள்ள முத்தமிழ்க் காவலர் முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

உலக செம்மொழி மாநாட்டை மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து நொடிக்கு நொடி விழாவை சிறப்புற நடத்த தாங்கள் எடுத்துவரும் முயற்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.பெரியாரின் அடிச்சுவட்டில் நடந்துவரும் தாங்கள் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் தாங்கள் மனது வைத்தால் காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு சாதனையை செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.என்னவென்றால் கோவை மாநாட்டில்
,பெரியாரின் நெருங்கிய நண்பரும் ,தமிழ் இசைக்காக தமிழ் இசைச் சங்கம் தோற்றுவித்த கோவையில் பிறந்த டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் திருவுருவச் சிலையை நிறுவவும் ,சிறப்பு தபால் தலையை வெளியிடவும், தங்களின் மகிழ்ச்சியான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் நன்றியுடன்,

P.தர்மலிங்கம்
செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச் சங்கம்

Sunday, January 3, 2010

குமுதத்தில் வணிக வைசிய செட்டியார்

இந்த வார குமுதம் புத்தாண்டு இதழில் (6‍‍/01/2010) நான் தமிழன் தொடரில் நம் வணிக வைசிய செட்டியார் சமூகத்தை பற்றி கட்டுரை வெளிவந்துள்ளது.படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இக்கட்டுரை நம்முடைய முயற்சி என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி!
குமுதம் இதழுக்கு நம் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!